கனடாவில் கார் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது
கனடாவில் பெறுமதிமிக்க கார்கள் கொள்ளையிட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய இரண்டு பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
ஒன்டாரியோ மாகாணம் ஓக்வில் நகரில் உள்ள ஒரு கார் டீலர்ஷிப்பில் நடந்த உடைப்புச் சம்பவத்தில், சுமார் 2 மில்லியன் டொலர் மதிப்புள்ள ஆடம்பர கார்கள் திருடப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக தற்போது இரண்டு சந்தேகநபர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஜனவரி 11 அன்று, குயீன் எலிசபெத் வே மற்றும் ஃபோர்த் லைன் அருகே உள்ள நிறுவனமொன்றி7ல் இந்த உடைப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
முகமூடி அணிந்த எட்டு பேர் வரை காட்சிஅறையை உடைத்து உள்ளே பிரவேசிக்கும் காட்சிகள் காணொளியாக பதிவாகியுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
ஒவ்வொருவரும் ஒரு கார் சாவியை எடுத்துக் கொண்டு வாகனங்களை இயக்கியபடி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
பிரபல பண்டக் குறிகளைக் கொண்ட ஆடம்பர கார்கள் பல களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.