கனடாவில் மூன்று உயிர்களை காவு கொண்ட வீட்டு வாடகைப் பிரச்சினை
கனடாவில் வீட்டு வாடகைப் பிணக்கு காரணமாக மூன்று உயிர்கள் காவு கொள்ளப்பட்டுள்ளன.
ஒன்றாரியோவின் ஸ்டோனி கிரிக் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் 57 வயதான வீட்டு உரிமையாளரும், வாடகைக் குடியிருப்பாளர்களான 27 வயதான பெண், 28 வயதான ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் உயரிழந்த மூன்று பேருமே எவ்வித குற்றச் செயல்களுடனும் தொடர்புடையவர்கள் என்பது கிடையாது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
வீடு தொடர்பில் ஏற்பட்ட பிணக்கு காரணமாக இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வீட்டு வாடகை உரிமையாளர் வாடகைக் குடியிருப்பாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
வீட்டு உரிமையாளர் பொலிஸார் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.