கருக்கலைப்பு சட்டத்துக்கு தற்காலிக தடை உத்தரவு பிறப்பித்த அமெரிக்க கூட்டாட்சி நீதிபதி
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் பெண்கள் கருக்கலைப்பு செய்வதை தடை செய்யும் சர்ச்சைக்குரிய புதிய சட்டத்தை ஒரு அமெரிக்க கூட்டாட்சி நீதிபதி தற்காலிகமாக தடுத்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஆஸ்டின் நகரின் அமெரிக்க மாவட்ட நீதிபதி ரோபர்ட் பிட்மேன் புதன்கிழமை மேற்கொண்ட இந்த நடவடிக்கை, குடியரசுக் கட்சியின் ஆதரவு சட்டத்தை அமல்படுத்துவதைத் தடுக்கிறது.
சமீபத்தில் ஜோ பைடன் நிர்வாகத்தால் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் கொண்டு வரப்பட்ட இந்த கருக்கலைப்பு தொடர்பான சட்டம், பெண்களிடம் எதிர்வினையை தூண்டியது.
'Senate Bill 8' என அழைக்கப்படும் சட்டம், நாட்டின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலத்தில் செப்டெம்பர் முதல் தடைசெய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.