UAEல் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு கொண்டு வரப்பட்டுள்ள புதிய சிவில் சட்டம்
ஐக்கிய அரபு எமீபரத்தில் வசிக்கும் முஸ்லிம் அல்லாத மக்களுக்காக புதிய சிவில் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்திலும் முஸ்லீம் மக்களுக்கென பிரத்யேக சட்டங்கள் பின்பற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வெளிநாடுகளிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் குடிபெயர்ந்த மக்களுக்கும் அதே சட்டங்கள் பின்பற்றப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.
மேலும் அச்சட்டங்கள் தங்களது வாழ்வியல் முறையிலிருந்து வேறுபடுவதாகவும் தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்தனர்.
இதையடுத்து, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்ற அபுதாபி அரசு, முஸ்லிம் அல்லாதவர்களுக்கு புதிய சிவில் சட்டம் ஒன்றை கொண்டுவந்துள்ளது.
இதுகுறித்து பிரபல செய்தி நிறுவனமான 'வாம்' வெளியிட்ட அறிக்கையில், குழந்தை பராமரிப்பு, வாரிசுரிமை, விவாகரத்து மற்றும் குடும்பம் தொடர்பான பிரச்சினைகளை கையாளும் வகையில் அபுதாபியில் இந்த புதிய சிவில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
இந்த புதிய சட்டத்தின் மூலம் குடிபெயர்ந்த மற்றும் முஸ்லீம் அல்லாதவர்கள் பயன்பெறுவார்கள் என்றும், இதற்காக தனி நீதிமன்றம் விரைவில் அமைக்கப்பட்டு இந்த வழக்குகளை விசாரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் மத்தியில் இந்த சட்டங்களுக்கு வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து துபாய் போன்ற முக்கிய நகரங்களில் இந்த புதிய சிவில் சட்டம் விரைவில் அமல்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.