வேற்றுகிரகவாசிகள் உண்மையா... அமெரிக்க பாதுகாப்பு அமைப்பு வெளிப்படை
வேற்றுகிரகவாசிகள் தொடர்பில் சமூக ஊடகங்கலில் பரவும் வதந்திகள் அனைத்தும் அறிவியல் சான்றுகள் கிடையாது என்று அமெரிக்க பாதுகாப்பு அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
வேற்றுகிரகவாசிகள் குறித்த நம்பகமான ஆதாரங்கள் ஏதுமில்லை என்ற போதிலும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் தொடர்பான 650 வழக்குகளை விசாரித்து வருவதாக அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.
மேலும் அவற்றில் பெரும்பாலானவை ஒலியை விட இரண்டு மடங்கு வேகத்தில் பறக்கக் கூடியவை. இது தொடர்பாக பென்டகன் அதிகாரி சீன்கிர்க்பேட்ரிக் தெரிவிக்கையில், வேற்றுகிரகவாசிகள் தொடர்பாக எந்த ஒரு வலுவான ஆதாரங்களும் இதுவரை தங்கள் வசம் சிக்கவில்லை என கூறியுள்ளார்.
மேலும், பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் இயற்கைக்கு மாறான செயல்பாடுகள் குறித்த பதிவுகள் மிக மிக குறைந்த அளவிலேயே இருக்கிறது.
இவற்றில் எதிலும் வெளிப்படையான என்ஜின் இல்லை என்றும், வெப்ப வெளியேற்றத்தை ஏற்படுத்தவில்லை அவை ரேடாரில் மட்டும் இடையிடையே தோன்றி உள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.