பிரித்தானியாவிலும் சிறார்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை
பிரித்தானியாவில் 16 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை விதிக்கும் சட்டம் விரைவில் கொண்டு வரப்பட உள்ளதாக பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார்.
'பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூ டியூப், எக்ஸ்' உள்ளிட்ட பல்வேறு சமூக ஊடகங்களால் குழந்தைகளின், மனநலம், உடல் நலம் பாதித்து வருவதாக சமீபகாலமாக உலகளவில் கவலை எழுந்துள்ளது.

'ஆன்லைன்' அபாயங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
முதல் நாடாக ஆஸ்திரேலியா, 16 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை விதித்தது. ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், ஸ்பெயினிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அந்த வரிசையில் தற்போது பிரிட்டனும் இணைந்துள்ளது. நாட்டில் சமூக ஊடக தடை சட்டத்திற்கான ஆலோசனை கடந்த மாதம் துவங்கப்பட்டதாகவும், விரைவில் இதற்கான சட்டம் கொண்டு வரப்படும் என்றும், பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார்.