திருமணத்திற்கு வந்தவரை நான்கு ஆண்டுகளாக தேடிய தம்பதி்; காத்திருந்த டிவிஸ்ட்!
பிரிட்டனில் 4 ஆண்டுக்கு முன்பு உற்றார் உறவினர் சூழ்ந்திருக்கப் பெரும் உற்சாகத்துடன் திருமணம் செய்துகொண்டனர் மிஷேல் - ஜான் வாய்லி (Michelle - John Wylie). தங்கள் திருமணத்திற்குப் பிறகு நிழற்படங்களை ஆர்வமாகப் பார்த்துக்கொண்டிருந்தனர்.
அப்போது அவற்றில் அடையாளம் தெரியாத நபரின் முகம் தென்பட்டது. அவர் யாரென்று குடும்பத்தார், நண்பர்கள் எல்லோரிடமும் விசாரித்தனர். ஆனால் அவரைத் யாருக்குமே தெரியவில்லை.
அழையா விருந்தாளி
இந்நிலையில் 4 ஆண்டாக எவ்வளவு முயன்றும் அவர் யாரென்ற கேள்விக்குப் பதில் கிடைக்காமல் பெரிதும் குழம்பிப்போயினர். இதனையடுத்த அந்த தமப்திகள் அண்மையில் சமூக ஊடகப் பிரபலம் ஒருவரின் உதவியை நாடினர்.
அந்த அழையா விருந்தாளியின் நிழற்படத்தைப் பகிர்ந்து அவர் யாரென்று தெரியுமா எனப் பதிவில் கேட்கும்படி தம்பதி கேட்டுக்கோண்டது. தமது நிழற்படத்தை அந்தப் பதிவில் கண்ட ஆண்ட்ரு ஹில்ஹவுஸ் (Andrew Hillhouse) தாம் அந்தத் திருமணத்திற்கு வந்த காரணத்தைப் அதில் பதிவிட்டார்.
அவரது தோழியின் திருமணத்துக்குச் செல்ல தாமதமாகிவிட்டதால் நண்பர் ஒருவர் தந்த ஹோட்டல் முகவரியை நம்பிச் சென்றார். அங்குப்போனதும் தான் மணப்பெண்ணாக இருந்த மிஷேலைக் கண்டு தவறான இடத்துக்கு வந்ததை அறிந்தார்.
திருமணத்தின்போது பாதி வழியில் கிளம்புவது சரியாக இக்காது என நாகரீகம் கருதி இறுதி வரை காத்திருந்தார்.
பிறகு நண்பரிடம் சரியான முகவரியை விசாரித்துத் தோழியின் திருமணத்திற்குச் சென்றதாக ஆண்ட்ரு பதி அளித்துள்ளாராம்.