நீண்ட நாள் நட்புக்கு முன்னுதாரணமாக மாறிய பிரித்தானிய தோழிகள்!
பிரித்தானியாவை சேர்ந்த தோழிகள் 4 பேர் நீண்ட நாள் நட்புக்கு எடுத்துக்காட்டாக மாறியுள்ளனர்.
பாடசாலை பருவம் தொடங்கி தங்களுடைய 17 வயதில் இருந்தே இணைபிரியா தோழிகளாக அவர்கள் இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 1972-ம் ஆண்டின்போது அங்குள்ள கடற்கரை நகரான டேவோசுக்கு அவர்கள் சுற்றுலா சென்றிருந்தபோது இவர்கள் 4 பேரும் சேர்ந்து கைகோர்த்தப்படி புகைப்படம் எடுத்து கொண்டனர்.
தங்களுடைய 70-ம் வயதில் இதே இடத்துக்கு மீண்டும் வந்து புகைப்படம் எடுத்து கொள்ள வேண்டும் என சாதாரணமாக பேசி கொண்டனர்.
இந்த நிலையில் சுமார் 50 ஆண்டுகளுக்கு பின்னரும் அவர்கள் இடையேயான நட்பு தொடர்ந்தது.
இதனால் குறிப்பிட்ட அந்த கடற்கரை நகருக்கு தோழிகள் 4 பேரும் சென்றனர். பாடசாலை பருவத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை மறுஉருவாக்கம் செய்தனர்.
அதாவது, அப்போது அணிந்திருந்த அதே நிறத்திலான ஆடைகளை உடுத்தி போட்டோ எடுத்து கொண்டனர்.
இந்த படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.