லெபனானில் உள்ள தங்களது குடிமக்களுக்கு பிரித்தானிய அரசு விடுத்த எச்சரிக்கை!
லெபனானில் உள்ள தங்களது குடிமக்கள் விரைவில் அந்நாட்டை விட்டு வெளியேற பிரித்தானியா அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையே ஏவுகணை மற்றும் வான்வழி தாக்குதல்கள் தொடர்ச்சியாக நடைபெறுகின்றன. மோதல் தொடர்பாக பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் இந்த நிலை விரைவில் மோசமடையக்கூடும். அயல்நாட்டு அலுவலக தூதரக குழுக்களுடன் இணைந்து பணியாற்றி வருவதாக பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஆனால் இந்த மோதல் தீவிரமடைந்தால், நாங்கள் அனைவரையும் உடனடியாக வெளியேற்ற முடியாமல் போகும் இக்கட்டான சூழல் உருவாகலாம்.
அவ்வேளையில் அரசாங்கம் சார்பில் நாங்கள் எந்த உத்தரவாதமும் அளிக்க முடியாது. நிலைமை மோசமானால், மக்கள் பாதுகாப்பு முகாம்களுக்கு செல்ல வலியுறுத்தப்படலாம்.
இதனால் லெபனானில் உள்ள பிரித்தானிய மக்கள் அங்கிருந்து வெளியேறிவிடுங்கள் என்பதே எங்களின் எளிமையான தகவல்," என்று பிரித்தானிய வெளியுறவுத் துறை செயலாளர் டேவிட் லேமி தெரிவித்துள்ளார்.