பிரித்தானியாவின் புதிய சட்டத்தால் விபரீதம் ; இலங்கை குடும்பமொன்றை வெளியேற உத்தரவு
பிரித்தானியாவின் புதிய கடுமையான குடிவரவுச் சட்ட விதிகளின் காரணமாக, இலங்கைக் குடும்பம் ஒன்று நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கடுமையான நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளது.
பிரித்தானியாவில் புலம்பெயர் பராமரிப்புப் பணியாளர்களாக (Care Workers) பணிபுரிபவர்களின் சார்ந்திருப்பவர்களை (Dependents) நாட்டை விட்டு வெளியேற்ற அந்நாட்டு உள்துறை அமைச்சு (Home Office) நடவடிக்கை எடுத்து வருகிறது.

பெற்றோருக்கு விசா நீடிப்பு
இதன்படி, பெற்றோருக்கு விசா நீடிப்பு வழங்கப்பட்ட போதிலும், அவர்களின் பிள்ளைகள் மற்றும் கணவர்மாருக்கு நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தியோகபூர்வ கடிதங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.
இலங்கையைச் சேர்ந்த வருணி அரச்சிகே என்ற பெண் ஸ்கொட்லாந்தில் பராமரிப்புப் பணியாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் இலங்கையில் வேதியியல் பட்டமும், பிரித்தானியாவின் டண்டீ (Dundee) பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றவராவார்.
வருணிக்கு வரும் 2031ஆம் ஆண்டு வரை விசா நீடிக்கப்பட்டுள்ளது. அவரது குழந்தைகளை நாட்டை விட்டு வெளியேறுமாறு பிரித்தானிய அரசு உத்தரவிட்டுள்ளது.
முறையாக அனைத்து விசா கட்டணங்களையும் செலுத்தி, அந்நாட்டு சட்ட விதிகளுக்கு அமைவாக வரி செலுத்தி வாழும் தங்களுக்கு, அரசாங்கத்தின் இந்த திடீர் உத்தரவு மிகப்பெரிய அதிர்ச்சியையும் வேதனையையும் அளித்துள்ளதாக வருணி அரச்சிகே கவலை வெளியிட்டுள்ளார்