பிரித்தானிய பிரதமர் போட்டியில் கடும் பின்னடவை சந்தித்த ரிஷி சுனக்! வெல்லப்போவது யார்?
பிரித்தானிய பிரதமர் தேர்தலுக்கான கருத்து கணிப்பில் ரிஷி சுனக்குக்கு (Rishi Sunak) பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவில் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் (Boris Johnson) அண்மையில் பதவி விலகியதை அடுத்து, புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி நடத்தி வருகிறது.
இந்நிலையில், கன்சர்வேட்டிவ் கட்சி எம்.பி.க்கள். இடையே நடந்த முதல் கட்ட தேர்தலில் அனைத்து சுற்றுகளிலும் ரிஷி சுனக் முதல் இடத்தை பிடித்ததால் அவர் பிரதமராக தேர்வு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், தற்போதைய நிலவரத்தின்படி கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்களிடையே ரிஷி சுனக்கை காட்டிலும், லிஸ் டிரஸ்சுக்கே அதிக ஆதரவு உள்ளது.
இதனிடையே பிரதமர் பதவிக்கான போட்டியில் லிஸ் டிரஸ், ரிஷி சுனக்கை விட 28 புள்ளிகள் முன்னிலையில் இருப்பதாக கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன.
இதனால் பிரித்தானியாவின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ் (liz truss) தேர்வு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.