நாட்டிற்கே முன்னுரிமை... பிரித்தானிய பிரதமராக மக்களுக்கு உறுதியளித்த கீர் ஸ்டார்மர்!
பிரித்தானியாவில் நடந்துமுடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்ற தொழிலாளர் கட்சியை சேர்ந்த கீர் ஸ்டார்மர் அந்நாட்டு புதிய பிரதமர் ஆக பதவியேற்றுள்ளார்.
இதைத் தொடர்ந்து மக்கள் முன் பேசிய அவர், "மாற்றத்திற்கான பணிகள் துவங்குகின்றன. ஆனால் நாம் பிரித்தானியாவை மீண்டும் கட்டமைப்போம் என்பதில் எந்த சந்தேகமும் கொள்ள வேண்டாம்," என்றார்.
"நம் நாட்டின் முதல் பிரிடிஷ் -ஆசிய பிரதமராக அவர் செய்த சாதனைகளுக்கு தேவையான கூடுதல் முயற்சியை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது. அதற்கு இன்று அடையாளம் காண்கிறோம்.
மேலும் அவர் தனது தலைமையின் கீழ் கொண்டு வந்த அர்ப்பணிப்பையும் அங்கீகரிக்கிறோம்."
"எனது அரசாங்கத்தில் நாட்டிற்கு முன்னுரிமை அளித்து, கட்சி மீது அதன்பிறகே கவனம் செலுத்தப்படும். இன்றைய உலகம் நிலையற்ற ஒன்றாக இருக்கிறது.
இதற்கு சிறிது காலம் தேவைப்படும், ஆனால் மாற்றத்திற்கான பணிகள் உடனே துவங்கிவிடும் என்பதில் சந்தேகம் கொள்ளாதீர்கள்," என்று தெரிவித்தார்.