யூத எதிர்ப்பு கருத்து; பிரித்தானியா பெண் மருத்துவர் பணி இடைநீக்கம்
யூத எதிர்ப்பு கருத்துக்களைப் பதிவிட்ட சமூக ஊடகங்களில் பிரித்தானியா தேசிய சுகாதாரச் சேவையின் வதிவிடப் பெண் மருத்துவர் ஒருவர் 15 மாதங்களுக்கு பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
31 வயதான எலும்பியல் அறுவை சிகிச்சை பயிற்சி நிபுணரான மருத்துவர் ரஹ்மே அலாத்வான் (Rahmeh Aladwan), வன்முறை நடவடிக்கை மற்றும் பயங்கரவாத அமைப்புகளுக்கு சமூக ஊடகங்களில் ஆதரவை வெளிப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

அறுவை சிகிச்சை பயிற்சி நிபுணரான மருத்துவர்
மருத்துவரின் பதிவுகள் அவர் மீதும், அவரது தொழில் மீதுமான நோயாளிகளின் நம்பிக்கையை கேள்விக் குறிக்கியாக்குவதாக குறிப்பிட்டு பிரித்தானிய மருத்துவ நிபுணர்கள் தீர்ப்பாய சேவை ரஹ்மே அலாத்வானை பணி நீக்கம் செய்துள்ளது.
எனினும், இனவெறி அல்லது வெறுப்பு பேச்சுகளை வெளியிட்டமை தொடர்பான குற்றச்சாட்டுக்களை பிரித்தானியாவில் வசிக்கும் பாலஸ்தீனியரான மருத்துவர் அலாத்வான் மறுத்துள்ளார்.
எவ்வாறெனினும் அவர் தற்சமயம், மருத்துவர்களை பதிவு செய்யும், கண்காணிக்கும், மற்றும் மருத்துவத் தரத்தை பாதுகாக்கும் பிரித்தானியாவின் பொதுச் மருத்துவ கவுன்சிலின் விசாரணைகளை எதிர்கொண்டுள்ளார்.