உக்ரைன் விவகாரத்தில் யார் எதிர்த்தாலும் பதிலடி நிச்சயம்; புதின் கடும் எச்சரிக்கை
ரஷ்யா மற்றும் உக்ரைன் விவகாரத்தில் தலையிடுவோர் தங்களுடைய வரலாற்றிலேயே சந்தித்திராத விளைவுகளை எதிர்கொள்ள வேண்டி வரும் என புதின் கடுமையாக எச்சரித்துள்ளார்.
முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைன் ‘நேட்டோ’ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா, உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளது. , உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள உத்தரவிட்ட ரக்ஷ்ய அதிபர், உக்ரைன் ராணுவம் ஆயுதங்களை கீழே போட வேண்டும் என்றும் புதின் கூறியுள்ளார்.
எனினும், உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான பதற்ற நிலையை முன்னிட்டு உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இன்று செய்தியாளர்கள் முன் தோன்றி பேசினார்.
இதன்போது அவர், ரஷ்ய மக்கள் போரை விரும்புகிறீர்களா? இந்த கேள்விக்கு பதிலளிக்க நான் ஆர்வமுடன் உள்ளேன். ஆனால் இதற்கான பதில் ரஷ்ய கூட்டமைப்பின் குடிமக்களாகிய உங்களை சார்ந்து உள்ளது என கூறினார்.
அத்துடன் உக்ரைன் பகுதி மீது ரஷ்யா ஆக்கிரமிக்கும் நடவடிக்கையில் ஈடுபடவில்லை. எங்களுடைய திட்டம் ஆனது (சிறப்பு ராணுவ நடவடிக்கை) உக்ரைன், ராணுவ நடவடிக்கையை கைவிட வேண்டும். உக்ரைனின் நாசிச போக்கை நீக்க வேண்டும்.
எங்கள் விவகாரத்தில் யாரேனும் தலையிட முற்பட்டால், அல்லது எங்களுடையே நாட்டுக்கும், மக்களுக்கும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டால், அதற்கு ரஷ்யா உடனடி பதிலடி கொடுக்கும் என அவர்கள் தெரிந்திருக்க வேண்டும் என்றும் புதின் குறிப்பிட்டார்.
மேலும் , உங்களுடைய வரலாற்றிலேயே இதற்கு முன்பு நீங்கள் சந்தித்திராத கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டி வரும் என்றும் ரக்ஷ்ய திபர் புதின் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.