இனி எந்த உறவும் இல்லை... ரஷ்யாவை மொத்தமாக துண்டித்த உக்ரைன்
ரஷ்யாவுடன் இனி எந்த காலத்திலும் வர்த்தக உறவை வைத்துக்கொள்வதில்லை என அறிவித்துள்ள உக்ரைன், அந்த நாட்டில் இருந்து மேற்கொள்ளும் அனைத்து இறக்குமதிக்கும் தடை விதித்துள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து ஆண்டுக்கு 6 பில்லியன் டொலர் அளவுக்கு வர்த்தகம் செய்து வந்துள்ளது உக்ரைன். தற்போது ரஷ்யாவின் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கையால் கடுமையான சேதங்களை எதிர்கொண்டுள்ள உக்ரைன், வர்த்தக உறவையும் துண்டித்துள்ளது.
இது தொடர்பில் பொருளாதார அமைச்சர் யூலியா ஸ்விரிடென்கோ தெரிவிக்கையில், ரஷ்யா உடனான வர்த்தகத்தை முழுமையாக நிறுத்துவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இனிமேலும் ரஷ்ய பொருட்கள் எதுவும் உக்ரைனில் இறக்குமதி செய்யப்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். பிப்ரவரி 24ம் திகதிக்கு பின்னர், இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகங்கள் முடங்கியிருந்த நிலையில், தற்போது உக்ரைன் அரசாங்கம் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், எங்கள் பணத்தில் எதிரிகள் தங்களை வளர்த்துக்கொள்ள இனி அனுமதிக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.