ரஷ்யாவிடமிருந்து மற்றுமொரு நகரை கைப்பற்றிய உக்ரைன்
தலைநகர் கெய்வில் இருந்து கிழக்கே 12 மைல் தொலைவில் உள்ள நகரத்தை ரஷ்ய துருப்புக்களிடம் இருந்து மீட்டுள்ளதாக உக்ரேனிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதை அடுத்து நகரில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்படுகின்றதாகவும் கூறப்படுகின்றது.
இது குறித்து ப்ரோவரியின் மேயர் ஒரு தொலைக்காட்சி உரையில்,
ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்கள் இப்போது நடைமுறையில் புரோவரி மாவட்டம் முழுவதையும் விட்டுவிட்டதாக கூறினார்.
உக்ரேனியப் படைகள் இப்போது எஞ்சியுள்ள ரஷ்ய வீரர்களையும், இராணுவ வன்பொருள் மற்றும் கண்ணிவெடிகளையும் அகற்றி வருகின்றதாகவும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை புச்சா, மகரிவ் மற்றும் போரோடியங்கா உள்ளிட்ட கியேவைச் சுற்றியுள்ள பகுதிகளைத் திரும்பப் பெற்றதாக அதிகாரிகள் கூறியதை அடுத்து, உக்ரைனால் மீட்கப்பட்ட சமீபத்திய பகுதி இதுஎன தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.