ரஷ்யாவின் ஹெலிகொப்டரை சுக்குநூறாக்கிய உக்ரைன்!
ரஷ்யா - உக்கிரன் போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் , பிரிட்டனின் மிகவும் மேம்பட்ட போர்ட்டபிள் ஏவுகணை அமைப்பு, உக்ரைனில் முதல் முறையாக பயன்படுத்தப்படுகின்றது.
பிரிட்டனின் முதல் ஏவுகணை பயன்பாட்டிலேயே ரஷ்ய ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியதாக தி டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மூன்று இயக்க ஈட்டிகள் (kinetic darts) மூலம் இந்த அதிவேக ஸ்டார்ஸ்ட்ரீக் இலக்குகளைத் தாக்கி அழிக்கும் என கூறபொபடுகின்றது.
இது கிழக்கு லுஹான்ஸ்க் பிராந்தியத்தில் ரஷ்யாவின் Mi-28N ஹெலிகொப்டரை இரண்டாக உடைப்பதை வீடியோ காட்டுகிறதாகவும் தி டைம்ஸ் கூறியது. மேலும் இது ரஷ்ய விமானத்தின் வாலை வெட்டுவது போன்ற காட்சிகள் காணப்பட்டது.
அதேவேளை உக்ரைனில் கிட்டத்தட்ட ஒரு வாரமாக விமான எதிர்ப்பு அமைப்பு பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், வீடியோவில் காட்டப்பட்டுள்ள காட்சி இதை நம்புவதாகவும் பாதுகாப்பு அமைச்சக வட்டாரம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.