உக்ரைன் எதிர்பார்ப்பதை எல்லாம் கனடாவால் வழங்க முடியாது!
உக்ரைன் எதிர்பார்க்கும் எல்லா உதவிகளையும் கனடாவினால் வழங்கப்பட முடியாது என பிரதி பிரதமர் கிறிஸ்டியா ப்ரீலாண்ட் ( Chrystia Freeland) தெரிவித்துள்ளார். உக்ரைனுக்கு கனடாவினால் மட்டுமே உதவி செய்ய முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்ய இயற்கை எரிவாயு குழாய் தொடர்பில் எடுக்கப்பட்ட கனடாவின் நடவடிக்கைகள் குறித்து எழுப்பப்பட்ட விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் ( Chrystia Freeland) இதனைத் தெரிவித்துள்ளார்.
பழுதடைந்திருந்த இந்த எரிவாயு குழாய்கள் மூலம் ஜெர்மனிக்கு எரிபொருள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றது. பழுதடைந்திருந்த எரிவாயு குழாய்கள் கனடாவில் பழுதுபார்க்கப்பட்டிருந்தது. இந்த நடவடிக்கை கடினமானது என்ற போதிலும் சரியான தீர்மானத்தை அரசாங்கம் எடுத்துள்ளது என அவர் ( Chrystia Freeland) சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேசயம் உக்ரைனியர்களுக்கு தொடர்ச்சியாக உதவிகளை வழங்குவதற்கு கனடா அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றதாகவும் தெரிவித்துள்ளார். அதன்படி சுமார் 3.4 பில்லியன் டொலர் பெறுமதியான இராணுவ உதவிகளை கனடா, உக்ரைனுக்கு வழங்கியுள்ளது என அவர் ( Chrystia Freeland) குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைனுக்கு ஆதரவாகவும், ரஸ்யாவிற்கு எதிராகவும் கனடாவினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து பெருமிதம் கொள்வதாகவும் பிரதி பிரதமர் கிறிஸ்டியா ப்ரீலாண்ட் ( Chrystia Freeland) தெரிவித்துள்ளார்.