மெலனியா ட்ரம்புக்கு உயரிய விருது வழங்கி கௌரவித்த உக்ரைன்
ரஷ்யா - உக்ரைன் போரில் பாதிக்கப்பட்ட உக்ரைனியக் குழந்தைகளை மீட்டதற்கும் மனிதாபிமான உதவிகளை வழங்கியதற்கும் அமெரிக்காவின் முதல் பெண்மணியான மெலனியா ட்ரம்புக்கு உக்ரைன் அரசு உயரிய விருதை வழங்கி கௌரவித்துள்ளது.
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே கடந்த 2022ஆம் ஆண்டு முதல் தொடரும் போரை முடிவுக்குக் கொண்டுவர சர்வதேச அளவில் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ரஷ்யா ஆக்கிரமித்துள்ள 'ஒலேஷ்கி' பகுதியில் தற்காலிக போர்நிறுத்தம் மேற்கொள்ள அமெரிக்காவின் முதல் பெண்மணி மெலனியா ட்ரம்ப் இரு தரப்புக்கும் இடையே வெற்றிகரமாக மத்தியஸ்தம் செய்தார்.
இதன் பலனாக, கடந்த ஒக்டோபர் மாதம் அப்பகுதியில் தற்காலிகப் போர்நிறுத்தம் அமுல்படுத்தப்பட்டு, உணவு மற்றும் மருத்துவமின்றி தவித்த உக்ரைனிய மக்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
மெலனியா ட்ரம்பின் இத்தகைய அமைதி முயற்சியைப் பாராட்டி, உக்ரைனிய ஜனாதிபதி ஸெலென்ஸ்கி அவருக்கு உக்ரைனின் புகழ்பெற்ற உயரிய விருதான Order of Princess Olga, 1st Class விருதை வழங்கிச் சிறப்பித்தார்.
அரசுச் செய்திகள் போர்க்காலச் சூழலில் மிகவும் அரிதான தற்காலிக போர்நிறுத்தத்தை அமுல்படுத்த பாடுபட்ட மெலனியா ட்ரம்ப், ரஷ்ய - உக்ரைன் பிரதிநிதிகளை வெள்ளை மாளிகைக்கு அழைத்து மேலும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.