போப் பிரான்சிஸிடம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தல்!
உக்ரைன் – ரஷ்யா போரை நிறுத்த மத்தியஸ்தம் செய்ய வேண்டும் என, போப் பிரான்சிஸிடம் (Pope Francis) உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) தொலைபேசி வாயிலாக வலியுறுத்தியுள்ளார்.
இந்த உரையாடல் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜெலன்ஸ்கி,
உக்ரைனில் நிலவும் “கடினமான மனிதநேய சூழல்” மற்றும் பாதுகாப்பு வழித்தடங்கள் ரஷ்ய துருப்புகளால் தடுக்கப்படுவது தொடர்பில் போப் பிரான்சிஸிடம் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “இருநாட்டு போரை நிறுத்துவது தொடர்பாக மத்தியஸ்தம் செய்ய வேண்டும்” என அவர் போப் பிரான்சிஸை வலியுறுத்தியுள்ளார்.
வருங்காலத்தில் உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான உயர்மட்ட அமைதி பேச்சுவார்த்தை நடைபெறும் இடமாக ஜெருசலேம் இருக்கும் என, ஜெலன்ஸ்கி திங்கட்கிழமை தெரிவித்திருந்தார்.