உக்ரைன் - ரஷ்யாபோர் ; மக்கள் மட்டுமல்லாது விலங்குகளும் அகதிகளானது!
ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையால் பொது மக்களை போல் அங்குள்ள விலங்களும் புகலிடம் தேடி அண்டை நாடுகளுக்கு பயணிக்கின்றதாக கூறப்படுகின்றது.
தலைநகர் கீவ் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட சிங்கம், புலி, காட்டு பூணை மற்றும் காட்டு நாய்கள் ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
அதேபோல் கீவ் நகருக்கு அருகில் போரால் சிக்கத் தவித்த சிங்கம், 6 புலி, காட்டுப் பூனை மற்றும் காட்டு நாய் உள்ளிட்டவைகள் போலந்தில் உள்ள மிருகக் காட்சி சாலைகு மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
மேலும் தனியாரிடம் இருந்து மீட்கப்பட்ட 6 சிங்கங்கள் மிருகங்கள் பாதுகாப்பு தொண்டு நிறுவனங்கள் மூலம் ஸ்பெயினுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.


