தோல்வியில் முடிந்த உக்ரைனின் முயற்சி !
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ராணுவ கூட்டமைப்பான நேட்டோவில் இணைய எடுத்த முயற்சியின் காரணமாக உக்ரைன் மீது ரஷியா போரை தொடங்கியது.
அதை தொடர்ந்து நேட்டோவில் இணையப்போவதில்லை என உக்ரைன் அறிவித்தபோதும் ரஷியா போரை நிறுத்தாது தொடர்ந்து வருகிறது.
இந்த சூழலில் போருக்கு மத்தியில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய உக்ரைன் விருப்பம் தெரிவித்து, அதற்கான முயற்சிகளை எடுத்து வந்தது.
எனினும் உக்ரைனுக்கு அரசியல் மற்றும் மனிதாபிமான ஆதரவை வழங்கி வரும் ஐரோப்பிய நாடுகள், உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் விரைவாக நுழையும் கோரிக்கையை நிராகரித்து விட்டன.
ஏனெனில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவது என்பது பல வருடங்கள் எடுக்கும் ஒரு நீண்ட செயல்முறை எனவும், ஆர்வமுள்ள நாடு பொருளாதார ஸ்திரத்தன்மை முதல் தாராளவாத மனித உரிமைகளை மதிப்பது மற்றும் ஊழலை வேரறுப்பது வரை கடுமையான அளவுகோல்களை சந்திக்க வேண்டும் எனவும் ஐரோப்பிய நாடுகள் கூறுகின்றன.