உக்ரைன் போர் ; புட்டினை கடுமையாக சாடிய ட்ரம்ப்
உக்ரைன் உடனான போரை புட்டின் ஏன் தொடர்கிறார் என்று தெரியவில்லை. ஒரு வாரத்தில் முடிவடையக்கூடிய போர் 4 வருடமாக தொடர்கிறது'' என ரஷ்ய ஜனாதிபதி புட்டினை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக சாடியுள்ளார்.
அமெரிக்க வெள்ளை மாளிகையில் ஆஜென்டினா ஜனாதிபதி ஜேவியர் மிலேயுடனான சந்திப்புக்கு பிறகு ட்ரம்ப் கூறியதாவது: விளாடிமிர் புட்டினுக்கும் எனக்கும் இடையே நல்ல உறவு இருந்ததால் நான் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளேன்.
நான்கு வருடங்களாக போர்
அவர் ஏன் இந்தப் போரைத் தொடர்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை. இந்தப் போர் அவருக்கு மிகவும் மோசமாக இருந்தது. அவர் நான்கு வருடங்களாக ஒரு போரில் ஈடுபடுகிறார். அதை ஒரு வாரத்தில் அவர் வென்றிருக்க வேண்டும். அவர் ஏராளமான வீரர்களை இழந்திருக்கலாம், அநேகமாக, இது மோசமான போர்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு நடந்த மிகப்பெரிய இறப்பு இது. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ஒரு போர் உட்பட எட்டுக்கும் மேற்பட்ட போர்களை முடிவுக்குக் கொண்டு வந்தேன்.
இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் பெரும் ஆற்றல் இருந்தது என்று நான் நினைக்கிறேன். அதில் நாங்கள் சிறப்பாகச் செயல்பட்டோம். ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போரை முடிவுக்கு வர வேண்டும். இவ்வாறு ட்ரம்ப் கூறியுள்ளார்.