உக்ரைன் பதுங்கு குழியில் நடந்த மகிழ்வான சம்பவம்
கிழக்கு உக்ரைன் நகரம் ஒன்றில் போருக்கு மத்தியில், பதுங்கு குழியில் இளம் ஜோடி ஒன்று திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
கிழக்கு உக்ரைன் நகரமான கிராமடோர்ஸ்க் பகுதியில் குடும்பத்தார் மத்தியில் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருந்தனர் Yulia மற்றும் Konstantine ஜோடி. ஆனால் எதிர்பாராத திருப்பமாக பிப்ரவரி 24ம் திகதி உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பை முன்னெடுத்தது.
தொடர்ந்து நடந்த குண்டுவீச்சுக்கு பயந்து, இருவரும் ஹொட்டல் ஒன்றில் தஞ்சமடைந்துள்ளனர். இந்த இக்கட்டான சூழலில் திருமணம் நடக்குமா என்ற சந்தேகம் அவர்களுக்கு எழுந்துள்ளது. போர் எப்போது முடிவுக்கு வரும் என்பது கணிக்க முடியாத சூழலில், திருமணத்தையும் தள்ளிப்போட அவர்களுக்கு மனம் வரவில்லை.
ஆனால், இந்த இக்கட்டான சூழலில் திருமணம் செய்துகொள்ள வேண்டுமா என்ற கேள்வியும் உறவினர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இருப்பினும் பெரும்பாலான நண்பர் அளித்த ஆதரவை அடுத்து, இருவரும் திருமணத்திற்கு தயாராகியுள்ளனர்.
இதனையடுத்து Dnipro அரசு அலுவலகத்தில் திருமணத்தை பதிவு செய்ய முடிவு செய்துள்ளனர். அப்போது தான் வான் தாக்குதல் எச்சரிக்கை ஒலிக்க, இருவரும் நண்பர்களுடன் பதுங்கு குழிகளில் ஒளிந்துள்ளனர்.
பின்னர், காத்திருக்காமல் அங்கேயே திருமண உடன்படிக்கையை நிறைவேற்றியுள்ளனர். வான் தாக்குதல் எச்சரிக்கை ஒலி அடங்கியதும், இருவரும் புதமணத்தம்பதிகளாக வெளியே வந்துள்ளனர்.
அடுத்த சில நாட்களில் தொடர்ந்து ரஷ்ய குண்டுவீச்சையை அவர்கள் எதிகொண்டதாகவும், பொதுமக்களுடன் பதுங்கு குழிகளில் ஒளிந்திருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.