ரஷ்யா பக்கம் சாய்ந்த உக்ரைன் அதிகாரிக்கு நேர்ந்த கதி!
தன் தாய்நாட்டுக்கு துரோகம் செய்து ரஷ்யா பக்கம் சாய்ந்த உக்ரைன் பொலிஸார் ஒருவர் கொல்லப்ட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த தகவலை உக்ரைன் இராணுவத்தின் சிறப்பு ஆபரேஷன் படைப்பிரிவு ட்விட்டரில் பகிர்ந்துள்ளது. ரஷ்யா உக்ரைனை ஊடுருவைதைத் தொடர்ந்து, தெற்கு உக்ரைனிலுள்ள Nova Kakhovka என்ற இடத்தில் பணியாற்றி வந்த பொலிஸாரான Serhiy Tomka என்பவர், ரஷ்யர்களுக்கு ஆதரவாக செயல்படத் துவங்கியுள்ளார்.

ரஷ்யாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வது, ரஷ்யர்களுடன் தகவல்கள் பகிர்ந்துகொள்வது என இருந்த Tomka, இனி தனக்கு பிரகாசமான எதிர்காலம்தான் என நம்பியிருந்தபோது, திடீரென அவரது வாழ்வு முடிவுக்கு வந்தது.
 குறித்த அதிகாரி  தனது காரில் பயணிக்கும்போது சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக  மேலும் தெரிவிக்கப்படுகின்றது.  
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        