உக்ரைனை ஆதரித்த ரஷ்ய கோடீஸ்வரருக்கு பாய்சன் அட்டாக்: வெளிவரும் பகீர் தகவல்
உக்ரைன் தொடர்பில் போர் நிறுத்த நடவடிக்கைகளுக்கு ஆதரவாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட முக்கிய உறுப்பினர்கள் சிலருக்கு பாய்சன் அட்டாக் நடத்தப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
குறித்த சம்பவம் மார்ச் மாத தொடக்கத்தில் உக்ரைன் தலைநகர் கீவ்வில் நடத்தப்பட்டதாக தெரிய வந்துள்ளது. இந்த தாக்குதல் சம்பவமானது ரஷ்ய கோடீஸ்வரர் ரோமன் அப்ரோவிக் மற்றும் உக்ரைனின் மூத்த இரு அதிகாரிகள் மீதும் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்ய கோடீஸ்வரர் அப்ரமோவிச், உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பை முடிவுக்கு கொண்டு வர பேச்சுவார்த்தை நடத்த உதவுமாறு உக்ரேனிய கோரிக்கையை ஏற்றுக்கொண்டவர்களில் ஒருவர்.
ஆனால் உக்ரைன் தரப்பில், குறித்த பாய்சன் அட்டாக் சம்பவத்தை பெருதுபடுத்த வேண்டாம் என்ற கோணத்தில் பேசி வருவதாக தெரிய வந்துள்ளது. இருப்பினும், ரஷ்யா உடனான பேச்சுவார்த்தையில் பங்கேற்கும் எவரும் எதையும் சாப்பிடவோ குடிக்கவோ கூடாது என உக்ரைன் தரப்பில் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே, அமெரிக்கா தரப்பில், அறிகுறிகள் அனைத்தும் பாய்சன் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டதாக தெரியவில்லை எனவும், சுற்றுச்சூழல் காரணமாக இந்த அறிகுறிகள் தென்பட்டிருக்கலாம் என குறிப்பிட்டுள்ளனர்.
இருப்பினும் ரஷ்ய தரப்பில் இதுவரை குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் எந்த கருத்தும் வெளியிடவில்லை. தொடர்புடைய பாய்சன் தாக்குதல் சம்பவத்தை வெளிச்சத்துக்கு கொண்டுவந்த பத்திரிகை,
அப்ரமோவிக் மற்றும் பேச்சுவார்த்தையி ஈடுபட்ட உக்ரைன் அதிகாரிகள் இருவருக்கும் கண்கள் சிவந்து போனதாகவும் அவர்களின் முகம் மற்றும் கைகளில் தோல் உரிந்தது போன்ற அறிகுறிகள் காணப்பட்டதாக செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், மூவரும் தற்போது ஆபத்து கட்டட்த்தில் இல்லை எனவும் உடல்நலம் தேறிவருவதாகவும் கூறப்படுகிறது.