போருக்கு மத்தியில் வளர்ப்பு பிராணிகளுடன் வெளியேறும் உக்ரைன் மக்கள்
ரஷிய போருக்கு மத்தியில் உக்ரைன் மக்கள் தங்கள் வளர்ப்பு பிராணிகளுடன் வெளியேறி வருகின்றனர்.
உக்ரைனில் போர் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வருவதால் அந்த நாட்டு மக்கள் வாழ்வாதாரம் தேடி அண்டை நாடுகளில் அடைக்கலம் புகுந்து வருகின்றனர்.
மிகவும் அத்தியாவசியமான உடைமைகளை மட்டும் எடுத்துக்கொண்டு குழந்தைகளை தோளில் சுமந்தவாறு மக்கள் அலைஅலையாய் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.
இந்நிலையில் தங்களின் இருப்பிடங்களில் இருந்து அண்டை நாடுகளை அடைவதற்கு பலநூறு கி.மீ. நடந்தே செல்ல வேண்டிய அவலநிலை உள்ளபோதிலும் மக்கள் தங்களின் வளர்ப்பு பிராணிகளை அப்படியே விட்டுவிட்டு செல்லாமல் அவற்றையும் தங்களுடன் அழைத்து செல்வது அவர்களின் உயிரிய மனித நேயத்தை காட்டுகிறது.
இதன்படி பறவைகள், முயல்கள், வெள்ளை எலிகள், பூனைகள் மற்றும் நாய்கள் என அனைத்து வளர்ப்பு பிராணிகளையும் மக்கள் எடுத்து செல்லும் காட்சிகளை காண முடிகிறது.