தாய்நாட்டை காப்பாற்ற உலகின் பல பகுதிகளில் இருந்து நாடு திரும்பும் உக்ரைனியர்கள்!
ரஷ்யா- உக்கிரைன் மோதல் தணிஆத நிலையில், ரஷ்ய ஆக்கிரமிப்பிற்கு எதிராக போராடுவதற்கு உலகின் பல பகுதிகளில்இருந்தும் உக்ரைன் மக்கள் தாயகம் திரும்பியவண்ணமுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதன்படி நாடு திரும்பும் உக்ரைன் நாட்டவர் ஒருவர் டோஹா விமானநிலையத்தில் காணப்பட்ட தனது நாட்டின் கொடியால் தன்னை போர்த்தியிருந்தார்- எப்பாடுபட்டாவது உக்ரைன் சென்றுவிடவேண்டும்என்ற உந்துதலுடன் அவர் காணப்பட்டதாக ஏபிசி கூறியுள்ளது.
அவர் நேபாளத்தில் ஐநாவிற்காக பணியாற்றியவர். இதன் காரணமாக உக்ரைன் எல்லைக்குள் சென்றால் அவரால் திரும்பி வரமுடியாது. ஆனால் தனது தனிப்பட்ட பயணம் முற்றிலும் தனிப்பட்டவிடயம் என தெரிவித்த அவர் தனக்கு இது மிகவும் முக்கியமானது என குறிப்பிட்டதுடன், எனது நாட்டில் இருக்கவிரும்புகின்றேன் அதுவே முதல் விடயம் என அவர் தெரிவித்தார்.
நாங்கள் வெற்றிபெறப்போவதற்கு இது இன்னுமொரு காரணம் என அவர் தெரிவித்தார். அதேசமயம் உலகின் பல பாகங்களில் இருந்தும் உக்ரைனிய மக்கள் தங்கள் நாட்டில் தங்கள் மக்களுடன் இருப்பதற்காகவும் எதிர்காலத்திற்காக போராடுவதற்காகவும் தங்கள் நாட்டிற்கு திரும்புகின்றனர். அன்டிரி டோகாவிலிருந்து வோர்சோ சென்றார்,
பொருட்களை எடுத்துக்கொண்டு பேருந்தில் ஏறி எல்லைக்கு சென்றதுடன் , தற்போது அவர் உக்ரைனின் மேற்கு பகுதியில் இருக்கின்றார். தங்கள் தாயகத்திற்கு திரும்பிக்கொண்டிருக்கும்பல உக்ரைனியர்கள் மேற்குவோர்சோவிலிருந்து போலந்து வழியாக உக்ரைன் எல்லைக்கு செல்கின்றதாகவும், உக்ரைனிலிருந்து தப்பிவெளியேறும் மக்களுடன் வரும் பேருந்துகள் பின்னர் எல்லையில் இருப்பவர்களை ஏற்றிக்கொண்டு உக்ரைன் செல்கின்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்று ஜேர்மனியிலிருந்து புறப்பட்டவர்கள்,அமெரிக்காவில் தனது கப்பலை விட்டுவிட்டு வந்த மாலுமி,சவுதிஅரேபியாவில் பணியாற்றும் ஒருவர் உட்பட பல உக்ரைன் பிரஜைகள் காணப்பட்டனர். அவர்கள் அனைவரும் உக்ரைனை காப்பாற்றுவதற்காக உக்ரைனிற்கு செல்கின்றனர்.
ஒலெக்ஸ்சான்ட்ர் பெட்டிரோவ் என்பவர் ரஸ்யா தன்னுடன் இணைத்துகொண்ட கிரிமியாவை சேர்ந்தவர்-உக்ரைனின் வான்வெளி தரையிறக்கபிரிவில் பணியாற்றிய அவர்தற்போது சவுதி அரேபியாவில் பணிபுரிகின்றார்.
நான்சவுதிஅரேபியாவிலிருந்தேன் யுத்தம் ஆரம்பித்ததும் எனக்கு உக்ரைன் திரும்புவதற்கான அனுமதியை தருமாறு கேட்டேன் எனது நிறுவனம் எனக்கு இடமாற்றத்தை தந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளர்கள் வரும்போது- அது ஒரு எதிர்வினை போன்றது எங்களின் வரலாறு எழுதப்படுகின்றது என்பதை நாங்கள் உணர்கின்றோம் என அவர் தெரிவிக்கின்றார்.
எங்கள் வரலாறு என்பது பெரிய பக்கம்,இந்த பக்கத்தில்இரத்தம் தோய்ந்த வார்த்தைகளால் எழுதுவது எனக்கு பிடிக்கவில்லை,இது மோசமான விடயம்,என அவர் தெரிவிக்கின்றார். தனது வீட்டிற்கு மெதுவாகவே செல்லமுடிவது குறித்து ஆத்திரத்துடன் காணப்படும் அவர் இராணுவத்தில் உள்ள தனது சகோதரர்கள் கடந்தசில நாட்களாக தன்னை தொடர்புகொள்ளாததுகுறித்து அவர் பதட்டத்துடன் காணப்படுகின்றார்.
ஏனையவர்களை போல அவர் பேருந்தில் ஏறி எல்லையை கடந்ததும் தான் எதிர்கொள்ளும் முதல் படையணியுடன் இணைந்துகொள்ள திட்டமிட்டுள்ளார். எதிர்கொள்ளவுள்ள யுத்தம் பற்றிய அச்சமும் அதன் முடிவு குறித்த உறுதிப்பாடும் காணப்படுகின்றது. சுதந்திரத்தின் விலை உக்ரைனியர்களிற்கு தெரியும் தற்போதுஅதற்கான விலையை செலுத்தவேண்டும் என்கின்றார் அவர்.
ஒலெக்சாண்ட்ரிற்கு பயிற்சி மற்றும்படைனுபவங்கள் உள்ளன ஆனால் அவருடன்அந்த பேருந்தில் பயணம் செய்யும் ஏனையவர்கள் எந்த யுத்தத்திலும் ஈடுபடாதவர்கள். நான் மாலுமி நான் தற்போது அமெரிக்காவிலிருந்து வருகின்றேன் என்கின்றார் ஒலே நொவிக்கோ . மெரிபோலில் உள்ள எனது வீடு ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்களால் சூழப்பட்டுள்ளது, எனது மனைவியும் மகனும் உள்ளே உள்ளனர் ஆகவே நான் அங்கு செல்லவேண்டும் என்கின்றார் அவர் .
நான்அருகில் உள்ள இராணுவமுகாமிற்கு செல்வேன்,நான் போரிடவிரும்புகின்றேன் எனக்கு அனுபவமில்லை நான் மாலுமி என்கின்றார் அவர்.
இதேவேளை சுமார் 2 மில்லியன் உக்ரைனியர்கள் வெளிநாடுகளில் பணியாற்றுகின்றனர் என மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இவர்களில் 70 வீதமானவர்கள் ஆண்கள் எனவும் கூறப்படுகின்றது.
பேருந்திற்காக காத்திருக்கும் தந்தையும் மகனும் கடந்தவாரமே உக்ரைனிலிருந்து புறப்பட்டனர் . போலந்தில் வேலைபார்த்து பணம் சம்பாதிப்பதற்காக வந்தவர்கள் தங்கள் ஜனாதிபதி விடுத்தவேண்டுகோளை தொடர்ந்து அவர்கள் நாடுதிரும்புகின்றனர்.
யுத்தத்தில் ஈடுபடுவதற்காக முன்னரங்கிற்கு செல்பவர்களிற்கு அதற்கு அவசியமான அடிப்படை பொருட்கள் கிடைக்கும் என்ற எந்த உத்தரவாதமும் இல்லை-இதன் காரணமாக மருத்துவ உணவுப்பொருட்களை போல இராணுவபொருட்களையும் பேருந்துகளில் ஏற்றுகின்றதாகவும் அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.



