பிரித்தானியாவில் குறைய தொடங்கும் தொற்று பாதிப்பு! இன்றைய நிலவரம்
பிரித்தானியாவில் கொரோனா தொற்று பாதிப்பால் கடந்த 24 மணித்தியாலத்தில் மேலும் 205 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் கொரோனா பரவலால் ஏற்படும் பாதிப்புகள் நாளுக்குநாள் உயர்ந்து வந்தநிலையில், கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 41,130 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் இதுவரை தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 86இலட்சத்து 95ஆயிரத்து 449 பேராக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக மேலும் 205 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 60 ஆயிரத்து 815 ஆக உயர்ந்துள்ளது.
பிரித்தானியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 1 கோடியே 69 லட்சத்து 18 ஆயிரத்து 511 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது கொரோனா பாதிப்புடன் 16 இலட்சத்து 16 ஆயிரத்து 123 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.