மெக்சிகோவில் மர்ம நபர்கள் அரங்கேற்றிய கொடூரம்: குழந்தைகள் உட்பட 8 பேருக்கு நேர்ந்த சோகம்
மெக்சிகோவில் மத்திய பகுதியில் உள்ள Guanajuato மாகாணம் சிலாவ் நகரில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் அங்குள்ள வீடுகளுக்குள் புகுந்து பொதுமக்கள் மீது திடீரென்று துப்பாக்கியால் சரமாரியாக சூட்டுள்ளனர்.
இந்த தாக்குதலில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஒரு வயது மற்றும் 16 வயது சிறுமிகளும் அடங்குவர். இதையடுத்து அந்த 2 மர்ம நபர்களும் தப்பிவிட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் துப்பாக்கி சூடு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மெக்சிகோ நாட்டில் அடிக்கடி போதைப்பொருள் மற்றும் கட்த்தல் கும்பல் இடையே மோதல் இடம்பெறும். இதேவேளை, அதிக வன்முறை சம்பவங்கள் நடைபெறும் மாகாணங்களில் குவானா ஜூவாடோவும் ஒன்று.
குறித்த துப்பாக்கிசூடு சம்பவம் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு இடையே நடைபெற்ற மோதல் காரணமாக நடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேபோன்ற சம்பவம் கடந்த நவம்பர் மாதம் சிலாவ் நகரில் நடந்தது. இதில் 11 பேர் கொல்லப்பட்டனர்.