40 ஆண்டுகளுக்குப் பின்னர் கேபிடல் ரோட்டுண்டாவில் நடைபெற்ற பதவியேற்பு!

Donald Trump United States of America
By Shankar Jan 20, 2025 05:28 PM GMT
Report

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரீகன் (Ronald Reagan) 1985 இல் வெள்ளை மாளிகையில் இரண்டாவது முறையாக பதவியேற்றபோது, ​​உறைபனி வெப்பநிலையின் விளைவாக விழா வொஷிங்டன் டி.சி.யில் உள்ள கேபிடல் ரோட்டுண்டா அரங்கிற்கு மாற்றப்பட்டது.

இப்போது 40 ஆண்டுகளுக்குப் பின்னர், 2025.01.20 திங்கட்கிழமை டொனால்ட் ட்ரம்பின் பதவியேற்பு விழாவும் அதே வானிலை காரணமாக கேபிடல் ரோட்டுண்டா அரங்கிற்குள் மாற்றப்பட்டுள்ளது.

40 ஆண்டுகளுக்குப் பின்னர் கேபிடல் ரோட்டுண்டாவில் நடைபெற்ற பதவியேற்பு! | United States Capitol Rotunda Trump Inauguration

கேபிட்டல் கட்டிட வளாகத்தின் திறந்த வெளியில் முன்னதாக திட்டமிடப்பட்ட பதவியேற்பு நிகழ்வின் போது பூஜ்ஜியத்திற்கு குறைவான வெப்பநிலையின் விளைவாக மக்கள் பாதிப்படைவதை பார்க்க விரும்பவில்லை என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.

வானிலை முன்னறிவிப்பாளர்கள் கனடாவில் இருந்து ஒரு கொடூரமான குளிர் அலை அமெரிக்காவை தாக்கக்கூடும் என்று எச்சரித்துள்ளனர்.

இது மேற்கு, மத்திய, தெற்கு மற்றும் கிழக்கு அமெரிக்காவில் உள்ள பகுதிகளை உறைய வைக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. ட்ரம்பின் பதவியேற்பு நாளான திங்கட்கிழமை (20), வொஷிங்டன் டி.சி.யில் வெப்பநிலை மைனஸ் 6 டிகிரி செல்சியஸாகக் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

40 ஆண்டுகளுக்குப் பின்னர் கேபிடல் ரோட்டுண்டாவில் நடைபெற்ற பதவியேற்பு! | United States Capitol Rotunda Trump Inauguration

குடியரசுக் கட்சியின் தலைவரும் (ரொனால்ட் ரீகன்) முதல் பெண்மணியும் (நான்சி ரீகன்) வழக்கத்திற்கு மாறாக குளிர் காலநிலை முன்னறிவிப்பு காரணமாக தனது இரண்டாவது பதவியேற்பு விழாவை வேறு வழியில்லாமல் உள்ளக அரங்கிற்குள் நடத்த முடிவு செய்த பின்னர், 1985 ஜனவரி 18 அன்று வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் லாரி ஸ்பீக்ஸ் செய்தியாளர்களிடம் இந்த தகவலை உறுதிப்படுத்தினார்.

ரொனால்ட் ரீகனின் பதவிப் பிரமாணம் ஜனவரி 20, 1985 அன்று அமெரிக்க கேபிடல் ரோட்டுண்டாவில் நடைபெற்றது. அன்றைய தினம் வெப்ப நிலை மைனஸ் 7 டிகிரி செல்சியஸ் ஆக இருந்தது.

முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா 2009 ஆம் ஆண்டு முதல் முறையாக பதவியேற்றபோது, ​​அது மைனஸ் 2 டிகிரியாகவும், 2021 இல் ‍ஜோ பைடன் பதவியேற்பின் போது 5.5 டிகிரி வெப்பமாகவும் இருந்தது.

திங்கட்கிழமை முன்னறிவிக்கப்பட்ட வெப்பநிலை 64 ஆண்டுகளுக்கு முன்பு வாஷிங்டனில் இருந்ததைப் போலவே உள்ளது.

1961 ஆம் ஆண்டு ஜோன் எஃப் கென்னடி மைனஸ் 5 டிகிரி வெப்பநிலையில் சத்தியப்பிரமாணம் செய்தார்.

1909 ஆம் ஆண்டில், வில்லியம் ஹோவர்ட் டாஃப்ட் தனது பதவியேற்பு விழாவை 10 அங்குல பனிப்பொழிவுடன் மேற்கொண்டு வெள்ளை மாளிகைக்குள் நுழைந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
நன்றி நவிலல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Mitcham, United Kingdom

06 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், kilinochchi

04 Nov, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US