அதிரடி தாக்குதல்களை ஆரம்பித்த அமெரிக்கா ; இருளில் மூழ்கிய முக்கிய நகரம்
வெனிசுலா தலைநகர் கராகஸில் குறைந்தது ஏழு குண்டுவெடிப்புகளும், தாழ்வாகப் பறக்கும் விமானங்களும் காணப்பட்ட நிலையில், ட்ரம்ப் நிர்வாகம் தாக்குதலைத் தொடங்கியதாக சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த வெடிப்புச் சம்பவங்களுடன் நகரின் பல பகுதிகளுக்கான மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

7 இடங்களில் தாக்குதல்கள்
வெனிசுலா தலைநகர் கராகஸ் மீது அமெரிக்கா தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது அமெரிக்க சினூக் ஹெலிக்கொப்டர்கள் வெனிசுலாவுக்குள் நுழைந்துள்ளதாகவும் சுமார் 7 இடங்களில் இதுவரை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாக்குதல்கள் தொடர்பில் வெனிசுலா அரசாங்கம் உடனடியாக பதிலளிக்கவில்லை. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வெனிசுலா மீது கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போவதாக மீண்டும் மீண்டும் தெரிவித்துவந்தார்.
இதில் விரிவாக்கப்பட்ட பொருளாதாரத் தடைகள், பிராந்தியத்தில் அமெரிக்க இராணுவ பிரசன்னம் அதிகரித்தல் என்பன அடங்கும்.