தடுப்பூசி போட்டுக்கொள்ளாத கனேடிய தாயார்: பிறந்த குழந்தைக்கு தீவிர சிகிச்சை
கனடாவில் கொரோனாவால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணி பெண் ஒருவர் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த தாயாரின் நிலை கருதி அறுவை சிகிச்சை மூலம் அவருக்கு குழந்தை பிறந்துள்ள நிலையில், தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
குறித்தப் பெண் சில வாரங்களுக்கு முன்பு யூத பொது மருத்துவமனைக்கு முதன்முதலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போதே அவரது நிலையை கருத்தில்கொண்டு அவரை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பின்னர் விரைவிலேயே வென்டிலேட்டரின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
குறித்த தாயார் இதுவரை தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை எனவும், அவரது நிலை நாளும் மோசமடைந்து வருவதாகவும், ஆக்ஸிஜன் அளவு குறைந்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளனர்.
ஆனால் இது தொடர்பில் அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்க முடியாத சூழல் எனவும் குறிப்பிட்டுள்ளனர். இதனையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு வாரத்தில் அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் மகப்பேறு நடந்துள்ளது.
தற்போது குழந்தையும் தாயாரும் தீவிர சிகிச்சையில் உள்ளதாக தெரிவிக்கின்றனர். மேலும், கர்ப்பிணியாக இருந்தும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருப்பதும் கொரோனாவுக்கு இலக்காவதால் தீவிர சிகிச்சை பிரிவுக்கு அனுமதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் 6 மடங்கு அதிகம் என மருத்துவர்கள் தரப்பு தெரிவித்துள்ளது.