விமானத்தில் பயணிகள் முன்பு மலம் மற்றும் சிறுநீர் கழித்த நபர்
எயார் இந்தியா விமானத்தில் நபர் ஒருவர் பயணிகள் முன்னிலையில் மலம் மற்றும் சிறுநீரைக் கழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 24 ஆம் திகதி டெல்லி நோக்கி பயணித்த எயார் இந்தியா விமானத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சக பணிகள் புகார்
அந் நபரின் செயலைக் கண்டு சக பணிகள் புகார் அளித்துள்ள நிலையில் இந்திய தண்டனை சட்டம் 294 மற்றும் 510 ஆகியவற்றின் கீழ் அவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
அதேவேளை கடந்த ஆண்டு , நியூயோர்க்கில் இருந்து டெல்லிக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பெண் பயணி மீது சக பயணி மதுபோதையில் அவர் மீது சிறுநீர் கழித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.