அமெரிக்க இராணுவ செயலாளர் இராஜினாமா
அமெரிக்க இராணுவ செயலாளர் டான் டிரிஸ்கோல்(Dan Driscoll), தனது பதவியிலிருந்து விலகுவதற்கான இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் சமர்ப்பித்துள்ளார்.
இராணுவத்தின் தற்போதைய நிலைமை தொடர்பாக ஜனாதிபதி ட்ரம்புடன் கலந்துரையாடிய பின்னரே டிரிஸ்கோல் (Dan Driscoll) தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளதாக அமெரிக்க இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

டிரிஸ்கோலுக்கும் (Dan Driscoll) அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத்துக்கும் இடையில், இராணுவத்தை நவீனமயமாக்குதல் மற்றும் இராணுவத் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் தொடர்பாக பல மாதங்களாக கருத்து வேறுபாடுகள் நிலவி வந்ததாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இராணுவத்தின் தயார் நிலை மற்றும் நவீனமயமாக்கல் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக டிரிஸ்கோல் தனது இராஜினாமாவில் கவலை தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
டிரிஸ்கோல் (Dan Driscoll) கடந்த 2025 பெப்ரவரி முதல் அமெரிக்க இராணுவ செயலாளராகப் பதவி வகித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.