அமெரிக்காவின் அடாவடித்தனம் ; போதைப்பொருள் நாடுகளின் பட்டியலில் இந்தியா
போதைப்பொருட்கள் கடத்தும் மற்றும் பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான், சீனா நாடுகளுடன் இந்தியாவையும் அமெரிக்கா சேர்த்துள்ளது.
அமெரிக்கா மற்றும் அமெரிக்கர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் 23 நாடுகளின் பெயர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. அதிலும் இந்தியாவின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் புழக்கம்
சீனா, பாகிஸ்தான், பஹாமஸ், பெலிஸ், பொலிவியா, பர்மா, கொலம்பியா, கோஸ்டாரிகா, டொமினிகன் குடியரசு, எக்குவடோர், எல் சல்வடோர், கவுதமாலா, ஹைத்தி, ஹோண்டுராஸ், ஜமைக்கா, லாவோஸ், மெக்சிகோ, நிகரகுவா, பனாமா, பெரு மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.
இதில், ஆப்கானிஸ்தான், பொலிவியா, பர்மா (மியான்மர்), கொலம்பியா மற்றும் வெனிசுலா ஆகிய ஐந்து நாடுகள் போதைப்பொருள் புழக்கத்தை தடுப்பதில் தோல்வியடைந்து விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள நாடுகள், தங்களது போதைப்பொருள் தடுப்பு முயற்சிகள் அல்லது அமெரிக்காவுடனான ஒத்துழைப்பு அளவைப் பிரதிபலிப்பதில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது. குறிப்பாக, இந்தியா, பாகிஸ்தான் நாடுகள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.