பசிபிக் பெருங்கடலில் மற்றுமொரு படகை தாக்கி அழித்த அமெரிக்கா ; உறுதிப்படுத்திய ட்ரம்ப்
வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை போதை பொருள் பயங்கரவாதி என்றும் அந்நாட்டில் இருந்து அமெரிக்காவுக்குள் அபாயகர போதை பொருட்கள் கடத்தப்படுகின்றன என்றும் ட்ரம்ப் கடுமையான குற்றச்சாட்டுகளை கூறினார்.
இந்த நிலையில், நிக்கோலஸ் மதுரோவும், அவருடைய மனைவி சிலியா புளோரசும் அமெரிக்க ராணுவ வீரர்களால் இந்த மாத தொடக்கத்தில், கைது செய்யப்பட்டு வெனிசுலாவில் இருந்து நாடு கடத்தப்பட்டனர்.

போதை பொருள் கடத்தல்
இதனை தொடர்ந்து, நிக்கோலஸ், அவருடைய மனைவி புளோரஸ் மீது நியூயார்க் நகரில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
மதுரோ கைது செய்யப்பட்ட பின்னர் முதன்முறையாக, கிழக்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் போதை பொருள் கடத்தலுடன் தொடர்புடைய படகு ஒன்று தாக்கி அளிக்கப்பட்டு உள்ளது. இதனை அமெரிக்காவின் பாதுகாப்பு படை இன்று உறுதிப்படுத்தி உள்ளது.
இந்த சமீபத்திய நடவடிக்கையால், இதுவரை தென்அமெரிக்க கடல் பகுதிகளில் போதை பொருள் கடத்தலில் ஈடுபட்ட படகுகள் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளான 36 படகுகள் தாக்கி அழிக்கப்பட்டு உள்ளன.
கடந்த செப்டம்பர் தொடக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டு வரும் இந்த அதிரடி நடவடிக்கைகளால் 117 பேர் வரை பலியாகி உள்ளனர். அவற்றில் பல தாக்குதல்கள் கரீபியன் கடலில் நடந்துள்ளன. இதனை அமெரிக்க ராணுவத்தினரும், ட்ரம்பும் இன்று உறுதி செய்துள்ளனர்.