ஏமன் எண்ணெய் துறைமுகம் மீது அமெரிக்கா தாக்குதல்; வளைகுடாவில் பதற்றம்!

Sulokshi
Report this article
ஏமனின் பாரிய செல்வமாக விளங்கும் ராஸ் இஸ்ஸா எண்ணெய் துறைமுகத்தை வியாழக்கிழமை (17) அமெரிக்கா தாக்கியழித்துள்ளது.
இதில் 38 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு, 102 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிகின்ற நிலையில், ஏமன் மீதான தாக்குதல் மத்திய கிழக்கில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மிகவும் கொடிய தாக்குதல்
ஈரான் ஆதரவாளர்கள் மீது அமெரிக்கா ஆரம்பித்த தாக்குதல்களில் மிகவும் கொடிய தாக்குதல் இதுவாகும்.
ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடல் கப்பல் போக்குவரத்து மீதான தாக்குதல்களை நிறுத்தாவிட்டால் ஜனவரி மாதம் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதிலிருந்து கடந்த மாதம் மத்திய கிழக்கில் மிகப்பெரிய இராணுவ நடவடிக்கையாக ஆரம்பிக்கப்பட்ட பாரியளவிலான தாக்குதல்களை நிறுத்த மாட்டோம் என அமெரிக்கா சபதம் செய்துள்ளது.
இந்த தாக்குதல் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எரிபொருளை துண்டிப்பதற்காக தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க இராணுவம் குறிபிட்டுள்ளது.