உக்ரைன்- ரஷ்யா போரால் ஈரான் கப்பல்களை சிறைபிடித்ததா அமெரிக்கா?
ஈரான் எண்ணெய் வளம் மிகுந்த நாடு. ஈரானில் இருந்து மற்ற நாடுகளுக்கு எண்ணெய் வழங்கப்படுகிறது.
ஈரானுடன் எண்ணெய் இறக்குமதி செய்ய அமெரிக்கா ஒப்பந்தம் செய்து கொண்டது. ஆனால் கடந்த 2015ல் அமெரிக்கா ஒப்பந்தத்தை முறித்தது. இதனால் ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி தடைபட்டது.
ஈரான் தனது முக்கிய பொருளாதாரமாக எண்ணெய் வர்த்தகத்தை புதுப்பிக்க முயல்கிறது. இந்நிலையில் ஈரானிடம் இருந்து 2 எண்ணெய் கப்பல்களை அமெரிக்கா கைப்பற்றியது. ரஷ்யா தற்போது உக்ரைனுடன் போரில் ஈடுபட்டுள்ளதால், ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய அமெரிக்கா தடை விதித்துள்ளது.
அதனால் அமெரிக்காவில் கச்சா எண்ணெய் குறைந்துள்ளது. இந்த நேரத்தில் எண்ணெய் டேங்கர் பிடிபட்டது. ஈரான் மீதான சில தடைகளை தளர்த்த அமெரிக்கா முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.