கனடாவுடன் இணைய விரும்பும் அமெரிக்கர்கள்: ஆய்வு முடிவுகள்
ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியானதிலிருந்தே சில நாடுகளுடன் வர்த்தகப்போரில் இறங்கியுள்ளார்.
அத்துடன், கனடாவை அமெரிக்காவுடன் இணைக்கப்போவதாக மிரட்டிக்கொண்டே இருக்கிறார்.
அவர் கனடாவை அமெரிக்காவுடன் இணைக்கப்போவதாக மிரட்டிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாட்டு மக்களில் சிலரோ, தாங்கள் கனேடிய குடியுரிமை பெற விரும்புவதாக தெரிவித்துள்ளார்கள்.
சமீபத்திய ஆய்வொன்றில், அமெரிக்கர்கள் கனடாவுக்குச் சென்று கனேடிய குடியுரிமை பெற விரும்புவது தெரியவந்துள்ளது.
அமெரிக்கர்களில் ஐந்தில் ஒருவர் தாங்கள் கனேடியர்களாக ஆக விருப்பம் தெரிவித்துள்ளார்கள்.
ஆய்வொன்றில் பங்கேற்ற அமெரிக்கர்களில் 20 சதவிகிதத்தினர், தங்கள் மாகாணத்தைக் கனடாவுடன் இணைக்க விருப்பம் தெரிவித்துள்ளார்கள்.
அத்துடன், வெறும் 9 சதவிகிதம் அமெரிக்கர்கள் மட்டுமே கனடா அமெரிக்காவுடன் இணைக்கப்படலாம் என தெரிவித்துள்ளார்களாம்.