அமெரிக்க நகர தெருவுக்கு வங்காளதேச கலிதா ஜியா பெயர்
அமெரிக்காவின் மிக்சிகன் மாகாணம் ஹாம்ட்ராம்க் நகரத்தில் அமைந்துள்ள ஒரு தெருவுக்கு வங்காளதேச முன்னாள் பிரதமர் மறைந்த கலிதா ஜியாவை கவுரவிக்கும் வகையில் ‘கலிதா ஜியா தெரு' என பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
வங்காள தேசத்தின் முன்னாள் பிரதமரும், வங்க தேச தேசியவாத கட்சியின் தலைவருமான கலிதா ஜியா உடல் நலக்குறைவு காரணமாக கடந்த டிசம்பர் மாதம் 30-ந்தேதி காலமானார்.

கலிதா ஜியா வங்காளதேசத்தில் 3 முறை பிரதமராக பதவி வகித்தவர்.
இந்தநிலையில் ஹாம்ட்ராம்க் நகரில் உள்ள ஜோசப் காம்பாவ் மற்றும் கோனால்ட் தெருக்களுக்கு இடையிலான சாலையின் ஒரு பகுதிக்கு கலிதா ஜியாவின் பெயரைச்சூட்டும் திட்டம் நகர சபையால் அங்கீகரிக்கப்பட்டது.
அந்த நகர சபை கவுன்சிலில் தற்போது வங்காளதேச வம்சா வளியைச் சேர்ந்த 4 பேர் உள்ளனர். அவர்களின் தீவிர முயற்சியால் ஹாம்ட்ராம்க் நகரத்தில் அமைந்துள்ள ஒரு தெருவுக்கு கலிதா ஜியா பெயர் சூட்டப்பட்டுள்ளது.