ட்ரம்ப் மீது விதிக்கப்பட்ட 83 மில்லியன் அபராதத்தை உறுதி செய்த மேல் நீதிமன்றம்
எழுத்தாளர் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச் செயல் தொடர்பில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு விதிக்கப்பட்ட தண்டனையை மேல் நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.
ட்ரம்புக்கு எதிரான 83.3 மில்லியன் டொலர் இழப்பீடு தீர்ப்பை இவ்வாறு மேல் நீதிமன்றம் உறுதிப்படுத்தியது பெண் எழுத்தாளர் இ. ஜீன் கேரோல் (E. Jean Carroll) தாக்கல் செய்த அவதூறு வழக்கில் விதிகக்ப்பட்ட 83.3 மில்லியன் டொலர் இழப்பீடு தீர்ப்பை இரண்டாம் சுற்று மேல் நீதிமன்றம் இன்று உறுதிப்படுத்தியது.
81 வயதான கேரோல், முன்னணி எழுத்தாளர் என்பதுடன் பல சஞ்சிகைகளில் அவர் எழுதியுள்ளார்.
சட்ட ரீதியான விலக்கு
1996-ஆம் ஆண்டு ட்ரம்ப் தன்னை நியூயார்க் நகரில் உள்ள பெர்க்டார்ப் குட்மான் விற்பனையகத்தில் ஆடை மாற்றும் அறையில் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கினார் என கேரோல் குற்றம்சாட்டினார்.
ட்ரம்ப் 2019-ல் இதை மறுத்து, கேரோல் “என் வகை அல்ல” என்று கூறியதோடு, அவர் புத்தகம் விற்கும் நோக்கில் கதை கற்பனை செய்தார் என குறிப்பிட்டார்.
இந்த கருத்துகள் அவரது தொழிலுக்கும், தனிப்பட்ட வாழ்வுக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியதாக கேரோல் வழக்கு தொடர்ந்தார்.
2024 ஜனவரியில் கேரோலின் நன்மதிப்பிற்கும் மனஉளைச்சலுக்கும் சேதம் விளைவித்ததாக தீர்மானித்து அபராதம் விதிக்கப்பட்டது.
ட்ரம்ப், ஜனாதிபதி பதவியில் இருந்தபோது அளித்த கருத்துகளுக்கு சட்ட ரீதியான விலக்கு உண்டு என்றும், உச்ச நீதிமன்றம் 2024-இல் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் தன்னை தண்டனைத் தீா்ப்பிலிருந்து விடுவிக்க வேண்டும் ட்ரம்ப் தரப்பு வாதிட்டது.
எனினும் மேல் நீதிமன்றம் அதை நிராகரித்து, முன்னதாக வழங்கப்பட்ட தீர்ப்பினை உறுதி செய்துள்ளது.