உக்ரைனுக்கு இரண்டாயிரம் கோடி மதிப்பில் கூடுதல் ராணுவ உதவி வழங்க அமெரிக்கா முடிவு!
உக்ரைனுக்கு மேலும் 2250 கோடி ரூபாய் மதிப்பிலான ராணுவ உபகரணங்கள் வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையை சமாளித்து பதில் தாக்குதல் நடத்தவும், உக்ரைனின் பாதுகாப்பு திறனை வலுப்படுத்தவும் ராணுவ உபகரணங்களை வழங்க உள்ளதாக அமெரிக்க ராணுவத் தலைமையகமான சர்வதேச தெரிவித்துள்ளது.
ராணுவத் தொகுப்பில் லேசர் ராக்கெட், ட்ரோன்கள், இருளிலும் குறிபார்த்து தாக்க உதவும் கருவிகள், பாதுகாப்பு தொலைத் தொடர்பு கருவிகள், மருத்துவ உபகரணங்கள், தோட்டாக்கள், வெடி மருந்துகள், தளவாட உதிரி பாகங்கள் உள்ளிட்டவைகளை வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 106 கோடி டாலர் மதிப்பிலான ராணுவ உதவிகளை உக்ரைனுக்கு வழங்கியதாக சர்வதேச செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.