ஹோர்முஸ் நீரிணையில் சீனக் கப்பல்களைத் தடுக்க அமெரிக்கா அதிரடி முடிவு
ஈரானிய எண்ணெயைக் ஏற்றிச் செல்லும் சீன எண்ணெய் கப்பல்களை ஹோர்முஸ் நீரிணையில் வழிமறித்துத் தடுக்கப்போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளமை மத்திய கிழக்கில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது சர்வதேச எரிசக்தி சந்தையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கத் திறைசேரிச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் இது குறித்துத் தெரிவிக்கையில், ஈரானிய எண்ணெயைக் கொண்டு செல்லும் சீன டாங்கர் கப்பல்களை அமெரிக்கா தடுத்து நிறுத்தும்.

"அவர்களால் (சீனா) ஈரானிய எண்ணெயைப் பெற முடியாது. அவர்கள் எண்ணெய் பெறலாம், ஆனால் அது ஈரானிய எண்ணெயாக இருக்கக் கூடாது" என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஹோர்முஸ் நீரிணை தங்களுக்குத் தடையின்றித் திறந்திருப்பதாகச் சீனா வாதிட்டிருந்தது.
ஈரானுடனான தமது வணிகத் தொடர்புகள் காரணமாக அந்த நீரிணையைப் பயன்படுத்த தமக்கு உரிமை உள்ளதாகவும், 'ஏனைய நாடுகள் தமது விவகாரங்களில் தலையிடக் கூடாது' என்றும் சீனா வலியுறுத்தியிருந்தம்ை குறிப்பிடத்தக்கது.