அமெரிக்க பாதுகாப்பு மந்திரியின் விமானம் இங்கிலாந்தில் அவசர தரையிறக்கம்
அமெரிக்க பாதுகாப்பு அமைச்சரின் விமானம் இங்கிலாந்தில் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டமை பரபரப்பாக பார்க்கப்படுகிறது.
நேட்டோ பாதுகாப்பு துறை மந்திரிகளுக்கான உயர்மட்ட கூட்டத்தில் பங்கேற்று விட்டு அவர் நாடு திரும்பிய போதே விமானத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டு விமானத்தின் முக்கிய பகுதியான முன்பக்க ஜன்னல் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டு உள்ளது.
இதனை தொடர்ந்து, விமானம் உடனடியாக இங்கிலாந்தில் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது.
நேட்டோ நாடுகளின் பாதுகாப்பு துறை மந்திரிகளுக்கான உயர்மட்ட கூட்டத்தில், உக்ரைனுக்கு தேவையான ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை அளிப்பதற்கு முன்னுரிமை கொடுக்கும் புதிய திட்டத்தில் உறுப்பு நாடுகள் அனைவரும் முன்வர வேண்டும் என்று நேட்டோ கூட்டணி நாடுகளை ஹெக்சேத் வலியுறுத்தி கேட்டு கொண்டார்.
ரஷியாவின் தாக்குதல் தொடர்ந்தால், அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் ஒன்றாக சேர்ந்து, ரஷியாவுக்கு எதிராக தடைகளை விதிக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்து பேசினார். இதேபோன்று அமெரிக்க தயாரிப்பு ஆயுதங்களை ஐரோப்பிய நாடுகள் கொள்முதல் செய்யவுள்ளன என்றும் குறிப்பிட்டார்.