ஈரான் கப்பல் ஊழியர்களை சிறை பிடித்த அமெரிக்கா!
போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அமெரிக்கா, ஈரான் கப்பல் ஊழியர்களை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாக ஈராம் குற்றம் சுமத்தியுள்ளது. ஈரான் துறைமுகங்களை முடக்கும் நடவடிக்கையாக ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க கடற்படை முற்றுகையிட்டுள்ளது.
அமெரிக்க கடற்படையின் எச்சரிக்கையை மீறி அக்கப்பல் ஈரானின் பந்தர் அப்பாஸ் துறைமுகத்துக்கு சென்றது. இதையடுத்து ஈரான் கப்பலை அமெரிக்க கடற்படை தடுத்து நிறுத்தி பறிமுதல் செய்த நிலையில் ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஈரானின் பிராந்திய கடல் எல்லைக்கருகில் ஓமன் கடலில் ஈரானிய வர்த்தகக் கப்பலான டவுஸ்கா மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
இது போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் கடற்கொள்ளைத்தனமான செயலாகும். கப்பல் ஊழியர்களும் அவர்களது குடும்பத்தினரும் அச்சுறுத்தப்பட்டு பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளனர்.
இதனை ஐ.நா.பாதுகாப்புச் சபை மற்றம் சர்வதேச கடல்சார் அமைப்பு ஆகியவை கண்டிக்க வேண்டும். மேலும் கப்பலையும் அதில் உள்ளவர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும்.
ஈரான் தனது இறையாண்மையைப் பாதுகாக்கவும் குடிமக்களைக் காக்கவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்றும் ஈரான் தெரிவித்து உள்ளது