உக்ரைனுக்கு மேலும் உதவிக்கரம் நீட்டிய அமெரிக்கா!
உக்ரைனுக்கு ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை வழங்குவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன்(Joe biden) அறிவித்துள்ளார்.
கப்பல் ஏவுகணை எதிர்ப்பு ராக்கெட்டுகள் , பீரங்கி ராக்கெட்டுகள் மற்றும் ஹோவிட்சர்களுக்கான சாதனங்கள் ஆகியவை இதில் உள்ளடங்கியுள்ளன.
உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன்(Volodymyr Zelenskyy) தொலைபேசி உரையாடலில், புதிய ஆயுதங்களைப் பற்றி பைடன்(Joe biden) தெரிவித்துள்ளார்.
மேலும் 225 மில்லியன் டாலர்
உக்ரைனில் உள்ள மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர், முக்கியமான மருத்துவப் பொருட்கள் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு, உணவு, தங்குமிடம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு பணம் வழங்குதல் உள்ளிட்ட மனிதாபிமான உதவியாக 225 மில்லியன் டாலர் தருவதாக ஜோ பைடன்(Joe biden) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.