அமெரிக்காவில் ஓடும் பேருந்தில் பெண் ஓட்டுநரும் மாணவியும் குடுமிப்பிடிச்சண்டை(Video)
அமெரிக்காவில், பெண் பேருந்து ஓட்டுநரும், 7-ம் வகுப்பு மாணவியும் பள்ளி பேருந்துக்குள் மாறிமாறி தாக்கிக்கொள்ளும் காணொலி இணையத்தில் வைரலானது.
டெட்ராய்ட் நகரில், பள்ளி பேருந்தில் ஏறிய 12 வயது சிறுமி, வெளியே நின்ற தனது சகோதரனை பார்த்து கையசைத்தபோது, பெண் பேருந்து ஓட்டுநர் சிறுமியை இருக்கையில் அமருமாறு கூறியுள்ளார்.
Detroit school bus driver suspended after fight with a student. pic.twitter.com/B74ZJ299Qw
— Laugh Out Loud TV?? | 200k followers ??? (@ImJokedTfOut) October 27, 2022
அதை தொடர்ந்து இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது. இந்நிலையில் பேருந்து ஓட்டுநர் முதலில் தாக்கியதாக மாணவியும், மாணவி முதலில் தாக்கியதாக பெண் ஓட்டுநரும் புகாரளித்துள்ளனர்.
இதனையடுத்து பெண் ஓட்டுநர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுளதாக தெரியவருகின்றது.