உறைபனி ஏரியில் விழுந்த சிறுவர்கள் - காப்பாற்றிய தீயணைப்பு வீரர்கள்!
அமெரிக்காவில் மீட்புப்பணி பயிற்சி நடைபெற்ற பகுதி அருகே சிறுவர்கள் உறைபனியில் விழுந்த நிலையில் அவர்களை அங்கு இருந்த தீயணைப்பு வீரர்கள் காப்பாற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள மிசோரி மாகாணத்தில் இருக்கும் ஒரு ஏரியில் நேற்றைய தினம் சனிக்கிழமை (12-02-2022) தீயணைப்புப்படையினர் வழக்கமான மீட்புப்பணி பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். கடும் பனிப்பொழிவு காரணமாக ஏரி உறைந்து இருந்தது.
தீயணைப்பு படையினர் பயிற்சி ஈடுபட்டுக்கொண்டிருந்த இடத்திற்கு சில மீட்டர்கள் தொலைவில் இரு சிறுவர்கள் (15 மற்றும் 17 வயது) உறைந்த ஏரியில் விளையாடிக்கொண்டிருந்தனர்.
RIGHT PLACE, RIGHT TIME: Firefighters in Missouri training for ice rescue operations were called in for the real thing when the ice broke beneath two teens running across the lake nearby where the simulation had just wrapped. https://t.co/bhTQwjTw7S pic.twitter.com/LfTdyUYzmf
— ABC News (@ABC) February 10, 2022
அப்போது, திடீரென பனி உடைந்து குளிரான ஏரிக்குள் அந்த இரு சிறுவர்களும் விழுந்தனர். உறையில் நிலையில் தண்ணீர் இருந்ததாலும், குளிர் தாக்க முடியாமல் அந்த சிறுவர்கள் உதவிக்கு அழைத்தனர்.
சிறுவர்களின் சத்தத்தை கேட்டு அங்கு மீட்பு பயிற்சியில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து உறைந்த ஏரியில் சிக்கிய இரு சிறுவர்களையும் பத்திரமாக மீட்டனர்.
ஏரிக்குள் விழுந்த இரு சிறுவர்களும் கிட்டத்தட்ட மயக்க நிலைக்கு சென்றுவிட்டதாக மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.