5 இலட்சம் புலம்பெயர்ந்தோருக்கு குடியுரிமை வழங்கும் அமெரிக்கா
சுமார் 5 இலட்சம் புலம்பெயர்ந்தோருக்கு குடியுரிமை வழங்கும் திட்டத்தை ஜனாதிபதி ஜோ பைடன் அறிவிக்கவுள்ளார்.
அதன்படி அமெரிக்க குடிமக்களை சட்டவிரோதமாக திருமணம் செய்து கொண்டுள்ளவர்க்ளுக்கே இவ்வாறு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
வெள்ளை மாளிகை அறிவிப்பு
இந்த அறிவிப்பை வெள்ளை மாளிகை விடுத்துள்ளது. குடியரசுக் கட்சியின் போட்டியாளரான டொனால்ட் டிரம்பின் இவ்வாறான குடிமக்களை நாடு கடத்தும் திட்டத்துக்கு இது முரணான திட்டமாகும்.
இந்த திட்டத்தின் மூலம் நேற்று வரை குறைந்தபட்சம் 10 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசிக்கும் 5 இலட்சம் பேர் சலுகை பெறுவார்கள் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
மேலும் இந்தத் திட்டம் அமெரிக்கர்களை திருமணம் செய்தவர்கள் மற்றும் அவர்களது குழந்தைகள் நிரந்தர வதிவிடத்திற்கு விண்ணப்பிக்க அனுமதிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.